உங்கள் படைப்புகளை சிறந்த முறையில் வெளியிட இதயத்துடிப்பு பதிப்பகம் 54A மின்வாரியத் தெரு துக்காப்பேட்டை செங்கம் (ராஜம்மாள் கம்ப்யுட்டர் சென்டர் அருகில்) 9524753459

புதிய ஆத்திச்சூடி, அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், உடையது விளம்பேல், ஊக்கமது கைவிடேல், எண் எழுத்து இகழேல், ஏற்பது இகழ்ச்சி, ஐயம் இட்டு உண், ஒப்புரவு ஒழுகு, ஓதுவது ஒழியேல், ஔவியம் பேசேல், அஃகம் சுருக்கேல். – ஆசிரியர்: ஔவையார்

Book For Sale

Thursday, August 11, 2016

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்




நான்மணிக்கடிகை


மனைக்கு விளக்கம் மடவார்; மடவார்
தனக்குத் தகைசால் புதல்வர்; - மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்
ஓதின் புகழ்சால் உணர்வு.

மகாகவி பாரதியார்


பாரத தேசம்

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
     ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம்தலை சாயுதல் செய்யோம்
     உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்.

நாலடியார்


பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று நாலடியார். இந்நூல், நானூறு பாடல்களைக் கொண்டது. அறக்கருத்துகளைக் கூறுவது. நாலடி நானூறு என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு. இந்நூல், சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு.

செந்நாப்போதார்

திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.

இவருடைய காலம் கி.மு.31 என்று கூறுவர். இதனைத் தொடக்கமாக கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. இவருடைய ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை.

இராமலிங்க அடிகளார்

இராமலிங்க அடிகளார், திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். இவர் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர். பெற்றோர் இராமையா – சின்னம்மையார். ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதியவை. இவர் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே.

1.எழுத்தியல்

எழுத்தின் பெயர் காரணம் எழுத்திற்கு ஒலி வடிவம், வரி வடிவம் என இரு வடிவங்கள் உள்ளன.  ஒலி வடிவம் மாறாதது. வரி வடிவம் கால ஓட்டத்தில் மாறக்கூ...