உங்கள் படைப்புகளை சிறந்த முறையில் வெளியிட இதயத்துடிப்பு பதிப்பகம் 54A மின்வாரியத் தெரு துக்காப்பேட்டை செங்கம் (ராஜம்மாள் கம்ப்யுட்டர் சென்டர் அருகில்) 9524753459

புதிய ஆத்திச்சூடி, அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், உடையது விளம்பேல், ஊக்கமது கைவிடேல், எண் எழுத்து இகழேல், ஏற்பது இகழ்ச்சி, ஐயம் இட்டு உண், ஒப்புரவு ஒழுகு, ஓதுவது ஒழியேல், ஔவியம் பேசேல், அஃகம் சுருக்கேல். – ஆசிரியர்: ஔவையார்

Book For Sale

Saturday, December 5, 2015

தமிழ் இலக்கியத் தகவல்கள் 1


மொழி
மொழியின் தோற்றம் ஆய்வுக்கு அப்பாற்பட்டது.

சிவபெருமானின் உடுக்கையிலிருந்து வடமொழியும் (சமஸ்கிருதம்), தென்மொழியும் (தமிழ்மொழி) பிறந்தன.

வடமொழியைப் பாணிணிக்குக் கொடுத்தவர் சிவபெருமான்.

தென்மொழியை அகத்தியருக்குக் கொடுத்தவர் சிவபெருமான்.

இத்தாலி மொழியை தந்தவர் தாந்தே.

ஆங்கில மொழியைத் தந்தவர் சாசர்.

ஜெர்மன் மொழியைத் தந்தவர் லூதர்.


டச்சு மொழியைத் தந்தவர் கிஸ்டியேர்ன் பெடெர்ஸன்.

மொழியின் தொடக்கத்தல் இருந்தவை அடிச்சொற்கள் அல்ல. நீண்ட ஒலித்தொடர்களே (வாக்கியங்கள்) ஆகும்.


ஒலித் தொடர்களில் இருந்து மனிதனால் அடிச்சொற்கள் (Root Word) படைத்துக்கொள்ளப்பட்டன.

மொழியின் தோற்றக் கொள்கை

பவ் –வவ் என்ற இசை மொழி அல்லது போலி மொழிக்கொள்கை.

பூப் – பூப் என்ற உணர்ச்சி மொழிக் கொள்கை.

டிங் – டாங் என்ற பண்புமொழிக் கொள்கை

யோ –யே என்ற ஏலேலோ அல்லது தொழில் ஒலிக்கொள்கை.

தானான என்ற பாட்டு மொழி அல்லது இன்பப் பாட்டுக் கொள்கை.

தனிநிலை மொழி

  இடைநிலை, விகுதி இல்லாமல் பகுதியாகவே உள்ள சொற்களைக் கொண்ட மொழி தனி நிலை மொழி எனப்படும்

  சீனமொழி, சயாம் மொழி, பர்மிய மொழி, திபத்திய மொழிகள் தனி நிலை மொழிகளாகும்.

  நீ, வா போ, பூ, தை, கை, வை, என வரும்.

உட்பிணைப்பு நிலைமொழி

 அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது இரண்டும் சிதைந்து ஒன்றுபட்டிருப்பின் அது உட்பிணைப்புநிலை மொழி எனப்படும். 

  ஐரோப்பிய மொழிகள் பலவும், வடமொழியும், அரபு மொழிகளும் இப்பிரிவைச் சார்ந்த மொழிகளாகும்.

   கொணா, கொணர், தந்தை, தவ்வை என வரும்.

   இதில் பகுதி விகுதிகளை எளிதில் பிரித்தறிய முடியாது.

   ஒரு மொழி தனிநிலையா, ஒட்டுநிலையா, உட்பிணைப்பு நிலையா என்பது அம்மொழியின் பெரும்பாலான சொற்களின் அமைப்பைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது.

    அங்கில மொழி உட்பிணைப்பு நிலையிலிரந்த தனி நிலைக்கு வந்து விட்டது.

    I Shall go போவேன் - போ (go) + வ் (shall) +  ஏன் (I)

    வாக்கியத்தில் சொற்களை இடம் மாற்றினாலும் அதன் பொருள்  மாறாதது தொகுதிநிலை எனப்படும்.

     நேற்று முருகன் பாடம் படித்தான் என்பது முருகன் நேற்றுப் பாடம் படித்தான் என்றோ பாடத்தை முருகன் நேற்றுப் படித்தான் என்றோ மாற்றினாலும் பொருள் மாறாது வருதல் காண்க.

   ஒட்டு நிலை மொழியும், உட்பிணைப்பு நிலை மொழியும் தொகுதிநிலையுள் அடங்கும்.

    வாக்கியத்தில் சொற்களை இடம் மாற்றினால் அதன் பொருள் மாறுவது பிரிநிலை எனப்படும்.

      சீனமொழி - நீ தா ஹோ - நீ என்னை அடிக்கிறாய்; ஞோ தா நீ - நான் உன்னை அடிக்கிறேன் என வரும்.

     மூன்று நிலைகளும் (தனி, ஒட்டு, உட்பிணைப்பு) ஒரு மொழியில் மாறிமாறி வரும். இம் மாறுதலை மொழியின் மாவட்டம் என்பர்.


No comments:

Post a Comment

1.எழுத்தியல்

எழுத்தின் பெயர் காரணம் எழுத்திற்கு ஒலி வடிவம், வரி வடிவம் என இரு வடிவங்கள் உள்ளன.  ஒலி வடிவம் மாறாதது. வரி வடிவம் கால ஓட்டத்தில் மாறக்கூ...