உங்கள் படைப்புகளை சிறந்த முறையில் வெளியிட இதயத்துடிப்பு பதிப்பகம் 54A மின்வாரியத் தெரு துக்காப்பேட்டை செங்கம் (ராஜம்மாள் கம்ப்யுட்டர் சென்டர் அருகில்) 9524753459

புதிய ஆத்திச்சூடி, அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், உடையது விளம்பேல், ஊக்கமது கைவிடேல், எண் எழுத்து இகழேல், ஏற்பது இகழ்ச்சி, ஐயம் இட்டு உண், ஒப்புரவு ஒழுகு, ஓதுவது ஒழியேல், ஔவியம் பேசேல், அஃகம் சுருக்கேல். – ஆசிரியர்: ஔவையார்

Book For Sale

Saturday, December 5, 2015

சங்க காலம் -1

இன்றைக்குச் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமே சங்க காலமாகும். அன்று தமிழகத்தின் வட எல்லை வேங்கடமாகவும் தெற்கெல்லை குமரிமுனையாகவும் கிழக்கு மேற்கு எல்லைகள் கடல்களாகவும் விளங்கின. இவ் எல்லைக்குள் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு எனப் பல நாடுகள் இருந்தன. சேர, சோழ, பாண்டிய நாடுகளை முடி மன்னர்களும் பிறநாடுகளைக் குறுநில மன்னர்களும் ஆண்டனர்.
 
மேலும் பறம்பு மலையைப் பாரியும், பொதிய மலையை ஆய் அண்டிரனும், மலைய நாட்டைத் திருமுடிக்காரியும், ஒய்மா நாட்டை நல்லியக் கோடனும் ஆகப் பல சிற்றரசர்கள் தமிழகத்தை ஆங்காங்கு ஆண்டு வந்தனர். மன்னர்களைத் தம் உயிராகவே மக்கள் கருதினர். தமிழ் மன்னர்கள் அனைவரும் தமிழ் நாட்டைச் சேர்நதவர்கள். தமிழகத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள், தாம் தமிழராக இருந்த காரணத்தால் தான் தமது மொழியினை, தமிழைத் தம் உயிர் போலக் கருதி வந்தனர். 
 
தம்மொழியில் வல்ல புலவரையும், பாணரையும், கூத்தரையும் பேணிப் பாதுகாத்தனர். அவர்கள் வாயிலாக முத்தமிழையும் வளப்படுத்தினர். தமிழக வேந்தர் தம் குடிமக்களின் நல்வாழ்வு ஒன்றிலேயே கருத்துக் கொண்டவராக, செங்கோல் வழுவாமல் செம்மையாக ஆட்சி புரிந்தனர். இதனால் தமிழர் வாழ்வு எல்லாத் துறைகளிலும் வளமுற்று விளங்கியது எனலாம்.
 

 

No comments:

Post a Comment

1.எழுத்தியல்

எழுத்தின் பெயர் காரணம் எழுத்திற்கு ஒலி வடிவம், வரி வடிவம் என இரு வடிவங்கள் உள்ளன.  ஒலி வடிவம் மாறாதது. வரி வடிவம் கால ஓட்டத்தில் மாறக்கூ...