உங்கள் படைப்புகளை சிறந்த முறையில் வெளியிட இதயத்துடிப்பு பதிப்பகம் 54A மின்வாரியத் தெரு துக்காப்பேட்டை செங்கம் (ராஜம்மாள் கம்ப்யுட்டர் சென்டர் அருகில்) 9524753459

புதிய ஆத்திச்சூடி, அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், உடையது விளம்பேல், ஊக்கமது கைவிடேல், எண் எழுத்து இகழேல், ஏற்பது இகழ்ச்சி, ஐயம் இட்டு உண், ஒப்புரவு ஒழுகு, ஓதுவது ஒழியேல், ஔவியம் பேசேல், அஃகம் சுருக்கேல். – ஆசிரியர்: ஔவையார்

Book For Sale

Wednesday, December 9, 2015

சிற்றிலக்கியம்




சிற்றிலக்கியம் என்பதைப் பிரபந்தம் என்றும் அழைப்பர். தமிழில் 96 வகைச் சிற்றிலக்கியங்கள் உள்ளன என்பர். பதிகம் என்பது ஒரு பொருளைக் குறித்துப் பத்துச் செய்யுள் பாடுவது. சதகம் என்பது ஒரு பொருளைக் குறித்து நூறு செய்யுள் பாடுவது.

அந்தாதி என்பதை அந்தம் ஆதி எனப் பிரிக்கலாம். அந்தம்,  ஆதியாய்த் தொடுப்பது அந்தாதியாகும். அஃதாவது ஒரு செய்யுளின் இறுதி எழுத்தோ, அசையோ , சீரோ, அடியோ அதனைத் தொடர்ந்து வரும் செய்யுளின் முதலாய் அமையும் வீதியில் உலா வரும் இறைவன் அல்லது மன்னன் மீது உலா பாடப்பெறும். உலா வரும் தலைவனைப் பார்த்து ஏழு வகைப் பருவத்து பெண்கள் சிலர், அவன், மீது காதல் கொண்டு அவன் சென்ற பின்பும், அவனை நினைத்துக் காதல் வேட்கையால் வருந்துவதாய் உலா பாடப்பெறும்.
தெய்வத்தையோ அரசனையோ ஒப்பற்ற பெரியோர் ஒருவரையோ பிள்ளைப் பருவத்தில் வைத்துப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியம் ஆகும்.

பரணி என்பது கலித்தாழிசையில் பாடப்பெறும் நூல். போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வெற்றி வீரனுக்குப் பரணி பாடுவர்.
பள்ளு- பள்ளமான வயல் வெளிகளில் உழவுத்தொழில் செய்பவரைப் பற்றிப் பாடுவது.

குறவஞ்சி- குறி சொல்லி வாழ்க்கை நடத்தும் பெண்டிரையும் அவரைச் சார்ந்தோர்பற்றியும் பாடுவது.

தூது - இது காதல் வயப்பட்டோர் தம் காதலுக்குப் பறவை,வண்டு, மேகம் போன்றவற்றை தூது விடுத்தும் தன் காதலை வெளிப்படுத்துமாறு பாடப்படுவது.

கலம்பகம் - அகப்பொருளும் புறப்பொருளும் அமைந்துவர பதினெட்டு உறுப்புகளைக் கொண்டது.

பாட்டுடைத் தலைவனின் வாழ்க்கை முழுமையையும் பாடுவது காப்பியம்: வாழ்க்கையின் சில பகுதிகளை விரிவாக்கிப் பாடுவது சிற்றிலக்கியம். அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்கிற நாற்பொருளும் சிற்றிலக்கியங்களில் குறைவு பட அமையும்.

சிற்றிலக்கியங்கள் 96-ன் பெயர்கள்

வீரமாமுனிவர் கூறும் 96 வகைச் சிற்றிலக்கியங்கள்

1.சதகம்    
2.பிள்ளைத்தமிழ்        
3.பரணி   
4.கலம்பகம் 
5.அகப்பொருள் கோவை             
6.ஐந்திணைச் செய்யுள்  
7.வகுக்கக் கோவை 
8.மும்மணிக்கோவை
9.அங்கமாலை     
10.அட்ட மங்கலம்  
11.அநுராகமால்  
12.இரட்டைமணி மாலை
13.இணைமணிமாலை 
14.நவமணிமாலை
15.நான்மணி மாலை 
16.நாமமாலை
17.பலசந்த மாலை 
18.கலம்பகமாலை  
20.புகழ்ச்சி மாலை  
21.பெருமகிழ்ச்சி மாலை
22.வருத்தமாலை  
23.மெய்கீர்த்தி மாலை 
24.காப்புமாலை 
25.வேனில்மாலை
26.வசந்த மாலை 
27.தாரகை மாலை  
28.உற்பவ மாலை  
29.தானைமாலை
30.மும்மணிமாலை  
31.தண்டக மாலை  
32.வீரவெட்சிமாலை
33.வெற்றிக்காந்தை மஞ்சரி  
34.போர்க்கெழு வஞ்சி 
 35.வரலாற்று வஞ்சி
36.செருக்கள வஞ்சி  
37.காஞ்சி மாலை 
38.நொச்சி மாலை  
39.உழிஞைமாலை
40.தும்பை மாலை  
41.வாகை மாலை 
42.தோரணமஞ்சரி 
43.எண்செய்யுள்
44.தொகைநிலைச்செய்யுள் 
45.ஓலியல் அந்தாதி  
46.பதிற்றந்தாதி  
47.நூற்றந்தாதி 
48.உலா  
49.உலாமடல்  
50.வளமடல் 
51.ஒருபா ஒருபஃது 
52.இருபா இருபஃது
53.ஆற்றுப்படை 
54.கண்படை நிலை 
55.துயிலெடை நிலை  
56.பெயரின்னிசை
57.ஊரின்னிசை  
58.பெயர் நேரிசை  
59.ஊர் நேரிசை 
60.ஊர் வெண்பா
61.விளக்க நிலை 
62.புறநிலை 
63.கடைநிலை 
64.கையறுநிலை  
65.தசாங்கப்பத்து
66.தசாங்கத்தயல்  
67.அரசன் விருத்தம் 
68.நயனப்பத்து 
69.பயோதரப் பத்து
70.பாதாதி கேசம் 
71.கேசாதி பாதம் 
72.அலங்காரப் பஞ்சகம்  
73.கைக்கிளை
74.மங்கல வள்ளை  
75.தூது 
76.நாற்பது 
77.குழமகன் 
78.தாண்டகம்  
9.பதிகம்
80.சதகம் 
81.செவியறிவுறூஉ 
82வாயுறை வாழ்த்து  
83.புறநிலை வாழ்த்து
84.பவனிக்காதல்  
85.குறத்திப்பாட்டு  
86.உழத்திப்பாட்டு  
87.ஊசல்
88.எழுகூற்றிருக்கை  
89.கடிகை வெண்பா 
90.சின்னப்பூ 
91.விருத்த விலக்கணம்
92.முதுகாஞ்சி 
93.இயன்மொழி வாழ்த்து 
94.பெருமங்கலம் 
95.பெருங்காப்பியம் 
 96.சிறுகாப்பியம்
சதுரகராதியுள் வீரமாமுனிவர் குறிப்படும் 96 வகைச் சிற்றிலக்கியங்கள் இவை. 

இவற்றுள் கூறப்படாத சிலவற்றை இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.

No comments:

Post a Comment

1.எழுத்தியல்

எழுத்தின் பெயர் காரணம் எழுத்திற்கு ஒலி வடிவம், வரி வடிவம் என இரு வடிவங்கள் உள்ளன.  ஒலி வடிவம் மாறாதது. வரி வடிவம் கால ஓட்டத்தில் மாறக்கூ...