உங்கள் படைப்புகளை சிறந்த முறையில் வெளியிட இதயத்துடிப்பு பதிப்பகம் 54A மின்வாரியத் தெரு துக்காப்பேட்டை செங்கம் (ராஜம்மாள் கம்ப்யுட்டர் சென்டர் அருகில்) 9524753459

புதிய ஆத்திச்சூடி, அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், உடையது விளம்பேல், ஊக்கமது கைவிடேல், எண் எழுத்து இகழேல், ஏற்பது இகழ்ச்சி, ஐயம் இட்டு உண், ஒப்புரவு ஒழுகு, ஓதுவது ஒழியேல், ஔவியம் பேசேல், அஃகம் சுருக்கேல். – ஆசிரியர்: ஔவையார்

Book For Sale

Wednesday, December 9, 2015

வரலாறு – 1


பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது டைனோசரஸ் என்ற பெரிய விலங்கு. அதன் முட்டைகள் அரியலூர் பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவை.

நமக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பற்றிய தகவல்களை ஆதாரங்களுடன் தொகுத்துக் கால வரிசைப்படி கூறுவது வரலாறு ஆகும்.
தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரில் நூறு ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன.

கி.பி 2004 இல் அகழ்வாராய்ச்சிப் பணியைத் தொடர்ந்த போது ஒரே இடத்தில் 160க்கும் அதிகமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


மக்கள் வாழ்ந்த காலம், அக்கால நிகழ்வுகள், உணவுமுறை, பண்பாடு, பழக்க வழக்கம், ஆட்சிமுறை, கலை இலக்கியம் போன்றவற்றைப்பற்றி அறிய உதவும் எழுதப்பட்ட ஆதாரங்கள் மற்றும் பழங்காலப் பொருள்கள் முதலியன வரலாற்று ஆதாரங்கள் எனப்படும்.

வரலாற்றுக்காலம், வரலாற்றுக்கு முந்தையகாலம் என்று வரலாற்றினை இரு காலக்கட்டங்களாகப் பிரிக்கலாம்.

அக்கால மனிதர்கள் குறித்த எழுத்துப்பூர்வமான ஆதாரங்களும், பிற ஆதாரங்களும் கொண்ட காலத்தை வரலாற்றுக் காலம் என்கிறோம்.
இலக்கியங்கள், வரலாற்றுக் குறிப்புகள், கல்வெட்டுககள், செப்புப் பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் போன்றவற்றை இத்தகைய எழுத்துப் பூர்வமான ஆதாரங்கள் எனலாம்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிய உதவும் ஆதாரங்கள்.
வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பற்றி அறிய அக்காலத்தைச் சார்ந்த பொருள்கள், சிதைவுகள், கற்கள், மரங்கள், விலங்குகளின் கொம்புகள், எலும்புகள், கற்கருவிகள், மண்டை ஓடுகள் படிமங்கள் போன்றவை உலகின் பல்வேறு பகுதிகளிலும் கிடைத்துள்ளன.

இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் சான்றுகள் கிடைத்துள்ளன. இவற்றைக் கொண்டு இந்தியாவின் தொல்பழங்காலத்தை அறிய முடிகிறது.

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பதை
பழைய கற்காலம் – Palaeolithic age (கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்)
புதிய கற்காலம் – Neolithic age (கி.மு.10,000 – கி.மு. 4,000)
செம்புக் கற்காலம் – Chalcolithic age (கி.மு. 3,000 – கி.மு.1,500)
இரும்புக் காலம் – Iron age (கி.மு.1,500 – கி.மு.600) என வகைப்படுத்தலாம்.
ஆதிமனிதன் பயன்படுத்திய கற்கருவிகளைக் கொண்டு கற்காலத்தைப் பழைய கற்காலம், புதிய கற்காலம் என இரண்டாகப் பிரிக்கலாம்.

1 பழைய கற்காலம் (Palaeolithic Age)

மனிதன் ஒரே இடத்தில் நிலையாகத் தங்கி வாழவில்லை; காடுகளில் வாழ்ந்தான். மரக்கிளைகளிலும், மரப் பொந்துகளிலும், குகைகளிலும் தங்கினான்.

ஆதிமனிதன் சிக்கிமுக்கிக் கற்களைப் பாயன்படுத்தி நெருப்பை உண்டாக்கினான்.

ஆதிமனிதன் இடி, மின்னல் முதலியவற்றுக்குப் பயந்தான்;  அவற்றை வணங்கினான்.

ஆதி மனிதன் தன்னைக் குளிர், வெயில், மழை போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இலை, தழைகள், மரப்பட்டைகள், விலங்குகளின் தோல் ஆகியவற்றை உடையாகப் பயன்படுத்தினான்.

கரடு முரடான கற்கள், மரக்கிளைகள், எலும்புகள், விலங்குகளின் கொம்புகள் முதலியனவற்றைக் கருவிகளாகப் பயன்படுத்தினான். ஆதி மனிதன் காடுகளில் கிடைத்த காய்கள், கனிகள், கிழங்குகள், விலங்குகளின் இறைச்சி முதலியவற்றை உண்டான்.

ஒரே பகுதியில் உணவு கிடைக்காததால், காட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் உணவைத் தேடி இடம் பெயர்ந்தான்.

காய், கனி, கிழங்குகள் கிடைக்காத போது ஆதிமனிதன் விலங்குகளை வேட்டையாடி உண்டான். அவ்வாறு வேட்டையாடக் கற்கள், எலும்புகள், மரக்கொம்புகள், விலங்குகளின் கொம்புகள் போன்றவற்றைக் கருவிகளாகப் பயன்படுத்தினான்.

முதலில் சிறுசிறு விலங்குகளைத் தனியாக வேட்டையாடினான்;  பின்னர் கூட்டத்துடன் சென்று வேட்டையாடினான். வேட்டையில் ஆண்களும் பெண்களும் பங்கேற்றனர்.

மடியில் குழந்தையைக் கட்டிக்கொண்டு ஒரு பெண் அம்பு விடுவது போன்ற ஓவியம் மத்தியப் பிரதேசத்திலுள்ள பிம்பேட்கா குகையில் உள்ளது.

இந்த ஓவியத்தால் பெண்களும் வேட்டையாடினர் என்பதை அறிய முடிகிறது.

ஒரு பொருள் குறித்த பல சொற்கள் – முற்காலம், பழங்காலம், பண்டைக்காலம், தொன்மைக் காலம், ஆதிகாலம், தொல்பழங்காலம்.

முக்கியத் தோற்றங்களின் ஆண்டுகள்:

பூமியின் தோற்றம் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்
மனிதனின் தோற்றம் 40,000 ஆண்டுகளுக்கு முன் (ஹோமோ சேப்பியன்ஸ்).
வேளாண்மை தோன்றிய காலம் சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்
நகரங்களின் தோற்றம் 4700 ஆண்டுகளுக்கு முன்
கி.மு – கிறிஸ்து பிறப்பதற்கு முன்
(BC – Before Christ)
கி.பி. – கிறிஸ்து பிறந்த பின்
(AD – Anno Domini)
CE – Common Era
BCE – Before Common Era
திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு.31
தி.மு – திருவள்ளுவருக்கு முன்
(BT – Before Thiruvalluvar)
தி.பி – திருவள்ளுவருக்குப் பின்
AT – After Thiruvalluvar

இந்தியாவில் பழைய கற்காலக் கருவிகள் கிடைக்கப்பெற்றுள்ள இடங்கள் மத்திய பிரதேசம் – சோன் ஆற்றுப்படுகை, பிம்பேட்கா, ம்ஹேஸ்வா.
ராஜஸ்தான் – லூனி ஆற்றுச் சமவெளி.
கர்நாடகம் – பாகல்கோட்
ஆந்திரபிரதேசம் – கர்னூல் குகைகள் ரேணிகுண்டா.
தமிழ்நாடு – வடமதுரை, அத்திரம்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர்.

புதிய கற்காலம் (Neolithic Age)
பழைய கற்கால மனிதன் இடம் பெயர்ந்து உணவைத் தேடி உண்டான்; வேட்டையாடி உண்டான்;

பின்னர், தன் உணவைத் தானே உற்பத்தி செய்துக்கொள்ள முயன்றான், ஆடு, மாடு, கோழி முதலியவற்றைப் பரிவுகாட்டித் தன்னுடன் வைத்து வளர்த்தான்.

மனிதன் முதலில் பழக்கிய விலங்கு நாய். இது வேட்டையின் போது உடன் சென்று உதவியது. ஆடு மாடுகளை மேய்த்து பால் இறைச்சி முதலியவற்றை உணவாகக் கொண்டான். மனித நாகரிக வளர்ச்சியின் அடுத்த படிநிலையைப் புதிய கற்காலம் எனலாம்.

அக்கால மனிதன் செதுக்கப்பட்ட நயமான கூர்மையான கற்கருவிகளைப் பயன்படுத்தினான்.
அக்காலத்தின் முக்கிய மாற்றம் உணவு உற்பத்தி ஆகும். அக்காலத்தில் தான் சக்கரமும் உருவாக்கப்பட்டது.

அதன் விளைவாகப் பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்கு எளிதாக எடுத்துச் சென்றான். மேலும் சக்கரத்தைப் பயன்படுத்தி மண்பாண்டங்கள் செய்தான்.

கல்லைத் தீட்டிக் கூராக்கினான். அதற்கு எலும்பு மரம் முதலியவற்றால் கைப்பிடிகள் பொருத்தினான்.

பின்னர் உலோகத்தின் பயன் அறிமுகமானது. முதலில் பயன்படுத்திய உலோகம் செம்பு.

மண் குடிசைகள் அமைத்தான்; மனிதன் குடியிருப்புகளை உருவாக்கிக் கூட்டமாக வாழ்ந்தான்.

குடிசைகள், வட்டம் அல்லது நீள் வட்டவடிவமானவை. இவை தரை மட்டத்திற்குக்கீழ், பள்ளமாக்கப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டன. கூகைளும் வேயப்பட்டன.

பயிர்த்தொழில் செய்தனர்.

விலங்குகளைப் பழக்கி வளர்த்தான்; மேய்ச்சல் தொழில் செய்தான்.
கோடரி, எலும்புக் கைப்பிடிகள், தூண்டில் முள், ஊசிகள், வெட்டுக் கருவிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன.

புதிய கற்காலத்தில், இறந்தோரைப் புதைக்கும் பழக்கம் இருந்தது. அவ்வாறு புதைக்கும்போது, அவர்களுடன் பழகிய விலங்குகளையும் சேர்த்து, வீட்டின் முற்றத்திலேயே புதைத்தனர்.

புதிய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ள இடங்கள்
திருநெல்வேலி, தான்றிக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம்

செம்புக் கற்காலம் (Chalcolithic Age)

செம்புக் கற்காலக் கருவிகள்
புதிய கற்கால முடிவில் செம்பு என்னும் உலோகத்தின் பயனை அறிந்திருந்தனர்.

செம்பினால் கருவிகள் செய்தனர்.

எனவே அக்காலம் செம்புக் கற்கருவிகள் காலம் என்று குறிப்பிடப்படுகிறது.

செம்புக் கற்கருவிகள் காலத்தில் மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களின் மேல் வண்ண ஓவியங்கள் வரைந்தனர்.
இவை வரிக்கோலங்களாக அமைந்து இருந்தன. ஹரப்பா நகர நாகரிகம் இக்காலத்தைச் சேர்ந்தது.

இரும்புக்காலம் (Iron Age)

இரும்பினால் கருவிகள் செய்த காலம் இரும்புக்காலம் எனப்படும்.
இரும்புக்காலத்தில் வீட்டுச்சாமான்களும், பயிர்த்தொழில் கருவிகளும் இரும்பினால் செய்யப்பட்டன.

உலோகத்தை உருக்கி கருவிகள் செய்ய அறிந்திருந்தனர்.
இரும்பு கால மக்களிடம் கற்பனைத் திறன் காணப்பட்டது.
வேதகால நாகரிகம் இரும்பு காலத்தைச் சார்ந்தது.

உலோகக் கலவைகள்
இரும்பு + குரோமியம் = சில்வர்
செம்பு + வெள்ளீயம் = வெண்கலம்
செம்பு + துத்தநாகம் = பித்தளை
இரும்பு + மாங்கனீசு = எஃகு

இப்பாடத்தில் உள்ள முக்கியச் சொற்கள்

தொல்லியல் ஆய்வு
தொல்பழங்காலம்
செம்புக்காலம்
வரலாற்றுச் சான்றுகள்
மில்லியன்
அகழ்வாராய்ச்சி
கற்காலம்
இரும்புகாலம்
படிமங்கள்

வெண்கலம்

2 comments:

1.எழுத்தியல்

எழுத்தின் பெயர் காரணம் எழுத்திற்கு ஒலி வடிவம், வரி வடிவம் என இரு வடிவங்கள் உள்ளன.  ஒலி வடிவம் மாறாதது. வரி வடிவம் கால ஓட்டத்தில் மாறக்கூ...