உங்கள் படைப்புகளை சிறந்த முறையில் வெளியிட இதயத்துடிப்பு பதிப்பகம் 54A மின்வாரியத் தெரு துக்காப்பேட்டை செங்கம் (ராஜம்மாள் கம்ப்யுட்டர் சென்டர் அருகில்) 9524753459

புதிய ஆத்திச்சூடி, அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், உடையது விளம்பேல், ஊக்கமது கைவிடேல், எண் எழுத்து இகழேல், ஏற்பது இகழ்ச்சி, ஐயம் இட்டு உண், ஒப்புரவு ஒழுகு, ஓதுவது ஒழியேல், ஔவியம் பேசேல், அஃகம் சுருக்கேல். – ஆசிரியர்: ஔவையார்

Book For Sale

Monday, December 14, 2015

வேதகாலம்



ஆரியர்கள் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து, கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் குடியேறியவர்கள்.கால்நடைகளை மேய்க்கும் தொழில் செய்த ஆரியர்கள், புதிய புதிய புல்வெளிகளைத் தேடிக்கொண்டு இடம்விட்டு இடம் பெயர்ந்தனர். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள், பின்னர் சில நூற்றாண்டுகளில் வட இந்தியா முழுவதிலும் பரவிக் குடியமர்ந்தனர்.
இந்தியாவில் அவர்கள் குடியேறிய பகுதி ஆரிய வர்த்தம் எனப்பட்டது. ஆரியர்கள் கால்நடைகளைக் கொண்டு வாழ்வு நடத்தினர். தங்கள் இனப்பெரியோர் பாடிய வேண்டுதல்களை வேதங்களாகத் தொகுத்தனர். வரலாற்றில் இக்காலகட்டம் வேதகாலம் என்று அழைக்கப்படுகிறது.

வேதகாலம் முந்தைய வேதகாலம், பிந்தைய வேதகாலம் எனப் பிரித்து அறியப்படுகிறது.
முந்தைய வேதகாலம் அல்லது ரிக் வேதகாலம்
(கி.மு.1500 – கி.மு.1000)
ரிக்வேதம் தொகுத்த காலத்தில் ஆரியர்கள் பெரும்பாலும், இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிற்துப் பகுதியிலேயே வாழ்ந்தனர். அவர்கள் முதலில் பஞ்சாபில் இருந்த சப்தசிந்து எனப்பட்ட (ஏழு நதிகள் பாயும் நிலம்) பகுதியில் குடியேறினர். ரிக்வேதத்தின் வாயிலாக வேதகால மக்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைகளை அறிய முடிகின்றது.
ஆரியர்களின் சமூக, சமுதாய அமைப்பு
குடும்பம் – கிராமம் – விஸ் – ஜனபதா – என்பதாக அமைந்திருக்கிறது.
அரசியல்
சமுதாயத்தின் அடிப்படை அலகு குடும்பம். பல குடும்பங்கள் இணைந்து கிராமம். கிராமத்தின் தலைவர் கிராமணி. பல கிராமங்கள் இணைந்து விசு (விஸ்) என்ற பெரிய குழுவானது. இதன் தலைவர் விசுவபதி. பெரிய ஆட்சி அமைப்பு “ஜனா” இதன் தலைவன் ராஜன் (அரசன்). வீரமும் வலிமையும் மிக்கவனே ராஜன் ஆனான். ராஜ்யத்தில் வாழ்ந்த மக்கள் பிரஜைகள் எனப்பட்டனர். அரசர் பிரஜாபதி என்றும் அழைக்கப்பட்டார். அரசப்பதவி பரம்பரை உரிமையாகக் கருதப்பட்டது. மகாஜனபதம் என்பது பல சிற்றரசுகள் இணைந்த பெரிய அரசு ஆகும்.
அரசனுக்கு நிர்வாகத்தில் உதவி செய்ய புரோகிதர், சோனனி (படைத் தலைவர்) போன்ற அதிகாரிகளும், சபா, சமிதி போன்ற அமைப்புகளும் இருந்தன.
சபா – முதியோர் அவை
சமிதி – ஊர்மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவை
அரசரின் கடமைகள்
தனது ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பகுதியை அந்நியரின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பது அரசரின் முதன்மையான கடமையாகும்.
புரோகிதர் கூறுகின்றபடி சமயச் சடங்குகளைச் செய்வது மன்னர் வழக்கம்.
தனது நாட்டு மக்களைப் பகை, போர், பஞ்சம முதலியவற்றிலிருந்து பாதுகாப்பது.
போர்க்காலங்களில் தம் படையுடன் அணிவகத்து முன்னின்று எதிரிகளுடன் போர்புரிதல்.
குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்து நீதியும், தண்டனையும் வழங்குதல்.
நாட்டின் எல்லைகளை விரிவாக்கி வலிமைப்படுத்துவது ஆகியவை மன்னனின் கடமைகளாகும்.
சமூகவாழ்க்கை
குடும்பத்தின் தலைவன் தந்தை தொடக்கத்தில் ஆண்டுகளுக்கு இணையாகப் பெண்களும் கல்வி கற்றனர். அவர்கள் ஆன்மிகம் போன்றவற்றில் திறம்பெற்று விளங்கினர். விஸ்வவாரா, அபலா, கோசா, லோபமுத்ரா போன்ற பெண் கவிஞர்களும் இருந்தனர். முதலில் சாதிப்பிரிவுகள் தோன்றவில்லை. ஒருதார மணம், பலதாரமணம் ஆகியவை நடைமுறையில்  இருந்தன. விதவைகள் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
பொருளாதார நிலை
ரிக் வேதகால மக்கள் கால்நடை வளர்ப்பையும், வேளாண்மையையும் முக்கியத் தொழில்களாகக் கொண்டனர். இரும்பின் பயனை நன்கு அறிந்திருந்தால் பல கருவிகள் செய்து, காடுகளைத் திருத்தி விளை நிலங்களாக்கினர். தச்சுவேலையைத் திறம்படச் செய்தனர். நூல் நூற்றல் மற்றொரு முக்கியத்தொழிலாகும். பருத்தி, கம்பளி ஆடைகளை உற்பத்தி செய்தனர். பொற்கொல்லர்கள் அணிகலன்களையும், குயவர்கள் வீட்டுப் பயன்பாட்டிற்கான மண் பாண்டங்களையும் உற்பத்தி செய்தனர். பண்டமாற்று முறை வழக்கத்திலிருந்து நதிகள் போக்குவரத்துக்குப் பயன்பட்டன. நிஷ்கா என்ற தங்க நாணயங்கள் வாணிகத்தில் பயன்படுத்தப்பட்டன.
உணவு
வேதகால மக்கள் கோதுமை, பார்லி, பால். தயிர், நெய், காய்கறிகள், பழங்கள், இறைச்சி போன்றவற்றை உணவாகக் கொண்டனர்;  சோம, சுரா பானங்களைப் பருகினர்.
உடை மற்றும் அணிகலன்கள்
பருத்தி, கம்பளி உடைகளை உடுத்தினர். ஆண்கள் வேட்டி, சால்வை போன்ற உடைகளை உடுத்தினர். தலைப் பாகை அணிவது வழக்கத்திலிருந்தது. பெண்கள் உள்ளாடை, இடுப்பில் அணியும் ஆடை, மேலாடை போன்ற உடைகளையும் உடுத்தினர். ஆண்களும், பெண்களும் அணிகலன்களை அணிந்தனர். காது வளையம், கழுத்து மாலை, கை வளையல், காற்சிலம்பு, தலையில் கட்டும் பட்டை போன்றவற்றை அணிந்தனர்.
சமயம்
இயற்கயையும், அதன் சக்திகளையும் வணங்கினர். சூரியன், நெருப்பு, காற்று, வானம், மரங்கள் ஆகியவற்றை வழிபட்டனர். இந்திரன், வருணன், அக்னி, எமன் ஆகிய கடவுள்களை வணங்கினர். கோயில்களோ, சிலை வழிபாடோ முந்தைய வேதகாலத்தில் இல்லை. ஆரியர்கள் யாகங்களையும், சமயச் சடங்குகளையும் செய்தனர். பின்னர் சமயம் சார்ந்த கருத்துகளும், விளக்கங்களும் தத்துவங்களாக இயற்றப்பட்டன. அவர்கள் நடத்திய யாகத்தீயில் பால், நெய், தானியம், பட்டு ஆகியவற்றையும் இட்டனர். அஸ்வமேதம், இராஜசூயம், வாஜபேயம் ஆகிய யாகங்கள் நடத்தப்பட்டன.
பிற்பட்ட வேதகாலம் (கி.மு.1000 – கி.மு.600)
சாம, யஜூர், அதர்வண வேதங்களின் காலத்தை பிற்பட்ட வேதகாலம் எனலாம். இக்காலத்தில் ஆரியர்கள் கிழக்கு நோக்கி பரவி இருந்தனர்.
நெசவாளர்கள், தோல் தொழிலாளர்கள், தச்சர்கள், நகை செய்வோர் முதலிய தொழிலாளர்கள் இருந்தனர். நிஷ்கா, சுவர்ணா, சதமானா முதலான தங்க, வெள்ளி நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன.
இக்காலத்தில் சாதி அமைப்புமுறை தோன்றி வலுப்பட்டது. இது வருண தர்மம் என்றும் அழைக்கப்பட்டது. யாகம் மற்றும் புரோகிதம் செய்வோர் பிராமணர்கள் எனப்பட்டனர். உயிரைப் பணயம் வைத்துப் போர்புரிந்து நாட்டைக் காப்பவர்களும், ஆள்பவர்களும் சத்திரியர்கள் எனப்பட்டனர். பயிர்த்தொழிலும், வாணிகமும் செய்வோர் வைசியர்கள் எனப்பட்டனர். இம்மூன்று பரிவினருக்கும் குற்றேவல் செய்வோர் சூத்திரர்கள் எனப்பட்டனர்.
பெண்களின் நிலை
பிற்பட்ட வேதகாலத்தில், மகளிர் நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை. ஆண்களுக்குக் கீழ்ப் படிந்தவர்களாகவே பெண்கள் நடத்தப்பட்டார்கள். அவர்களுக்குச் சொத்துரிமை இல்லை; ஆளும் சபைகளில் பங்கெடுத்துக் கொள்ளும் அரசியல் உரிமைகளையும் இழந்தனர். குழந்தைத் திருமணம் பரவலாக வழக்கத்திற்கு வந்தது. அரச குடும்பப் பெண்கள் மட்டும் சில உரிமைகளைப் பெற்றிருந்னர். கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் நடைமுறையில் இருந்தது.
கல்வி
ஆரிய தருமப்படி பிராமண மாணவர்கள், தங்கள் குருவுடன் குருகுலத்தில் தங்கிக் கல்வி கற்றனர். கல்வியில் சிறந்த விளங்கிய பெண்களும் இருந்தனர். கார்கி, மைத்ரேயி போன்ற பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கினர். குருகுலங்களில் மாணவர்கள் தத்துவம், தர்க்கசாஸ்திரம், சமயம், இலக்கணம், வானவியல், மருத்துவம், ஒழுக்கவியல், கணிதம், வெதங்கள், உபநிடதங்கள், இலக்கண நியதி போன்ற பாடங்களைப் பயின்றனர். அரச குமாரர்களுக்குத் தனுர்வேதம் எனப்படும் போர்க்கலை கற்பிக்கப்பட்டது.
சமயம்
வருண முறைப்படி பிராமண குருமார்களால் சமயத்துறையில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டன.
முற்பட்ட வேதகாலக் கடவுள்களின் முக்கியத்துவம் குறைந்தது. இக்காலத்தில் பிரம்மன், விஷ்ணு, ருத்ரன் (சிவன்) ஆகியோர் முக்கியத்துவம் பெற்றனர். வழிபாட்டில் யாகங்களும், சடங்குகளும் அதிகரித்தன. உயிர்ப்பலியிடுதலும், கடவுளை வணங்கும் வழிபாட்டு முறைகளும் முக்கியத்துவம் பெற்றன. மக்கள் ஆன்மா, வினைப்பயன், மோட்சம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இக்காலத்தில் இறுதியில் புரோகிதர்களின் ஆதிக்கத்துக்கும், யாகம், உயிர்ப்பலி போன்ற சடங்குகளுக்கும் கடுமையான எதிர்பார்ப்புகள் தோன்றின. இத்தகைய காரணகாரியத்திற்குப் பொருந்தாத சடங்குகளுக்கும்,  யாகங்களில் நாட்டின் வளம் வீணடிக்கப் படுவதற்கும் எதிராகத் தோன்றியவையே உயிர்களைக் காத்திடும் உணர்வை வளர்த்த சமண, பௌத்த சமயங்கள் எனலாம்.
ஆரிய நாகரிகம் இந்தியாவின் மிகப்பழமையான நாகரிகங்களில் ஒன்றாகும். இருப்பினும் இது திராவிட நாகரிகத்திலிருந்து பலவிதங்களில் வேறுபட்டு காணப்படுகிறது.
எண்
திராவிட நாகரிகக் கூறுகள்
ஆரிய நாகரிகக் கூறுகள்
1.
இருண்ட நிறமும், நடுத்தரமான உயரமும், கருமையான தலைமுடியும் உடையவர்கள்
வெள்ளை நிறமும் உயரமான உருவமும், செம்பட்டையான முடியும் உடையவர்கள்
2.
முதன்மைத் தொழில்: பயிர்த்தொழில், வாணிகம்
முதன்மைத் தொழில்:கால்நடை வளர்ப்பும், போர் புரிதலும்.
3.
பருத்தி ஆடை உடுத்தினர்.
கம்பளி, பருத்தி மற்றும் விலங்குகளின் தோலை உடுத்தினர்.
4.
முக்கிய விலங்கு: எருது, எருதுகளை வழிபட்டனர்.
முக்கிய விலங்கு: பசு, பசுக்களை வழிபட்டனர்.
5.
சுட்ட செங்கற்களால் வீடுகளைக் கட்டினர்.
களிமண் மற்றும் மூங்கில்கள் கொண்ட வீடுகளை அமைத்தனர்.
6.
வழிபாடு: கோயில் வழிபாடு, சிலை, லிங்கம், சூலம், சக்தி, நாகம்.
வழிபாடு: யாகம் செய்தல், சிலைகளும் கோயில்களும் இல்லை; இந்திரன் அக்னி, வருணன்.
7.
செம்பு உலோகத்தைப் பயன்படுத்தினர்; இரும்பை அறிந்திருக்கவில்லை.
இரும்பை அறிந்திருந்தனர்.
8.
புலியை அறிவர்; குதிரையை அறியார்.
புலியை அறியார்;  குதிரைகளைப் பயன்படுத்தினர்.
9.
நகர நாகரிகம் – நகரங்கள்
கிராம நாகரிகம் - கிராமங்கள்

1 comment:

  1. Thanks very much... Saved me from typing loads of text.

    ReplyDelete

1.எழுத்தியல்

எழுத்தின் பெயர் காரணம் எழுத்திற்கு ஒலி வடிவம், வரி வடிவம் என இரு வடிவங்கள் உள்ளன.  ஒலி வடிவம் மாறாதது. வரி வடிவம் கால ஓட்டத்தில் மாறக்கூ...